Friday, May 20, 2016

குழந்தைகளை நெறிப்படுத்துவதில் தண்டணைகளின் பங்கு

“உப்புத் திண்டவன் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்புச் செய்தவன் தண்டனை பெற வேண்டும்” என்பர். தண்டனைகள் தவறு செய்வதை விட்டும் தடுப்பதற்காகவும், தவறு செய்தவன் மேலும் தவறு செய்யாமல் இருக்கவும் உதவும்.
நாம் இங்கு குற்றம் செய்யும் குழந்தைகளைத் தண்டித்தல் குறித்து அலச உள்ளோம். குழந்தைகள் குற்றம் செய்தால் பெற்றோர்கள் உடல் ரீதியாகத் தண்டிக்கக் கூடாது. அப்படித் தண்டித்தால் பிள்ளைகள் பெற்றோருக்கு எதிராக காவல் துறையினரிடம் புகார் செய்யலாம் என சில நாடுகள் சட்டம் இயற்றி பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையில் இருக்கும் மானசீக உறவுக்குத் தடையாக இருக்கின்றனர். உதாரணமாக, தந்தை அடிக்க முற்பட்டால் உடனே 555 இற்கு போன் செய்தால் காவல் துறை வீட்டில் வந்து நிற்கும் என்று சட்டம் போட்டால் பெற்றோர் எப்படி பிள்ளைகளைத் திருத்த முடியும். பெற்றோருக்குப் பிள்ளைகள் விடயத்தில் இருக்கும் உரிமைகள் என்ன? என்ற கேள்வி எழும்.
மற்றும் சிலர் சட்டம் இருக்கின்றதோ இல்லையோ பாசத்தின் பெயரில் குழந்தைகள் தவறு செய்யும் போது கண்டுகொள்ளாதிருந்து விட்டு தவறுகள் பெருத்த பின்னர் கவலைப்படுகின்றனர்.
இது இப்படியிருக்க, குழந்தைகளைத் தண்டிக்கும் சிலர் கொடூரமாக நடந்து கொள்கின்றனர். குழந்தைகளை நல்வழிப் படுத்தல் என்பதுதான் தண்டனையின் நோக்கம். தண்டிக்காமலேயே வழிகாட்டுவதன் மூலம் அந்த இலக்கை அடையமுடியுமாக இருந்தால் தண்டனை இல்லாமலேயே நல்லுபதேசத்தின் மூலமே அடைய முயற்சிக்க வேண்டும்.
சிலர் தமது கோபத்தைத் தீர்ப்பதற்காகவும் பழிவாங்குவதற்காகவும் கையில் கிடைத்ததை எடுத்து தண்டிக்கின்றனர். இல்லையில்லை தாக்குகின்றனர். இது குழந்தைகளை நல்வழிக்குட்படுத்துவதற்குப் பதிலாக மனரீதியில் பாதிப்படையச் செய்யலாம். வீட்டை விட்டு வெருண்டோட வைக்கலாம். போதை, தீய நட்பு, கெட்ட பழக்க வழக்கங்கள் போன்ற தவறுகளுக்கு உள்ளாக்கலாம். இத்தகைய தண்டனை முறையை இஸ்லாமும் ஏற்காது. இதயத்தில் ஈரமுள்ள எவரும் ஏற்கமாட்டார்கள். எனவே தண்டித்தல் குறித்த சில வழிகாட்டல்களை வழங்குதல் நல்லதெனக் கருதுகின்றேன்.
1. கோபத்தில் இருக்கும் போது தண்டிக்காதீர்கள்:
“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்பார்கள். அதனால்தான் கோபப்பட்டவர் வீட்டில் பொருட்களை, கண்ணாடியை யெல்லாம் உடைப்பதைப் பார்க்கின்றோம். கோபத்தில் நாம் பேசினால் நமது பேச்சு சரியாக இருக்காது. தண்டித்தால் அது நியாயமாக இருக்காது. சின்னக் குற்றத்திற்குப் பெரிய தண்டனையளித்து அநியாயம் செய்துவிடுவோம். எனவே, உங்கள் கோபம் தணியும் வரையும் இருந்து நீங்கள் நிதானத்திற்கு வந்த பின்னர் நிதானமாகத் தண்டியுங்கள்.
நமது பெற்றோர்கள் சிலரின் செயற்பாடு ஆச்சர்யமாக இருக்கின்றது. மூத்தவன் இளையவனைத் தள்ளிவிட்டான். இளையவனின் தலையில் இரத்தம் வடிகின்றது. பாதிக்கப்பட்ட இளையவனைக் கவனிப்பதற்கு முன்னர் மூத்தவனுக்கு நாலு மொத்து மொத்தாவிட்டால் இவர்களுக்கு ஆத்திரம் அடங்காது. இதனால் தவறு செய்த பிள்ளை அடிக்குப் பயந்து ஓடி வேறு பிரச்சினைகளைத் தேடிக் கொண்டு வருகின்றது. பிறகு இரு குழந்தைகளுக்குமாக மருத்துவம் செய்ய வேண்டிய நிலை பெற்றோருக்கு!
எனவே, தண்டிப்பதிலும் நிதானமும் நியாயமும் தேவை. எனவே, கோபத்தில் இருக்கும் போது தண்டிப்பதைத் தவிருங்கள். நிதானமான நிலையில் தண்டியுங்கள். கோபம் அடங்கிய பின்னர் எப்படி தண்டிப்பது என்று கேட்கின்றீர்களா? குழந்தை இதன் பிறகு இந்தத் தவறை செய்யக் கூடாது என்று உணரும் அளவுக்கு அந்த எண்ணத்தை ஏற்படுத்து வதற்காகத் தண்டியுங்கள். கோபத்தைத் தீர்ப்பதற்காகத் தண்டிப்பதென்றால் அது முறையான தண்டனையல்ல.
2. சதா தண்டிக்காதீர்கள்:
சில பெற்றோர் எப்போதுமே பிள்ளைகளை திட்டித் தீர்த்துக் கொண்டே இருப்பார்கள். சதாவும் தண்டித்துக் கொண்டே இருப்பார்கள். இவ்வாறு நடந்து கொண்டால் எமது தவறைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு எழாது. தவறில் பிடிவாதமும் முரட்டுத்தனமும் உண்டாகும். வெளியிடத்தில் கூட தவறு செய்து அடிவாங்குவது அவர்களுக்குப் பெரிய பாதிப்பாகத் தெரியாது. நாம் வாங்காத அடியா, கேட்காத ஏச்சா என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டால் அவர்கள் வாழ்நாளிலேயே திருந்தமாட்டார்கள். எனவே, எப்போதாவது ஏதாவது பெரிய தவறுகளுக்காக மட்டும் தண்டியுங்கள். சின்னச் சின்னப் பிழைகளைத் திருத்துங்கள். அப்போது அடியென்றால் பயப்படுவார்கள். ஏச்சு என்றால் கூச்சப்படுவார்கள்.
3. வன்முறை வேண்டாம்:
குழந்தைகளைக் கண்டிக்கும் போது காயம் ஏற்படாவண்ணம் இலேசாகத் தண்டிக்க வேண்டும். கல் மனதுடன் நடந்து கொள்ளக் கூடாது. என் பெற்றோர் தண்டித்தாலும் என்னுடன் பாசத்துடன்தான் இருக்கின்றனர் எனக் குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும். கடுமையான தாக்குதல்களால் குழந்தைகள் குடும்பத்தின் எதிரிகளாக மாறுவர். தகாத உறவுகளை ஏற்படுத்தி தம்மைத் தண்டித்த பெற்றோர்களை இழிவுபடுத்துவர்.
4. தண்டித்தல் என்பது இறுதி முடிவாக இருக்கட்டும்:
எடுத்ததற்கெல்லாம் அடிக்காமல் புத்தி சொல்லுங்கள். சிலபோது கோபத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்துங்கள். சிலபோது அவர்களது தவறுகளால் நீங்கள் வருத்தப்படுவதை நடைமுறையில் காட்டுங்கள். பிள்ளை தானாக மனம் இறங்கி நான் செய்த தவறால் பெற்றோர்கள் வருந்துகின்றார்கள் என்று தன்னை மாற்றிக் கொள்ளலாம். இவையெல்லாம் பலனளிக்காத போது இலேசாக அடியுங்கள். எடுத்ததும் கடுமையாகத் தாக்கி விடாதீர்கள்.
5. தண்டிப்பதிலும் நீதி நியாயம் வேண்டும்:
தவறுக்கு ஏற்ற தண்டனையே வழங்க வேண்டும். தண்டனை முறையில் கூட பிள்ளை படிப்பினை பெற வேண்டும். மகன் தவறுதலாக ஒரு கோப்பையை உடைத்துவிட்டான். இதற்காக தந்தை அடிக்கிறார். அதே மகன் ஒரு ஹறாத்தைச் செய்துவிட்டான். இப்போது கோப்பைக்காக அடித்ததை விட குறைவாக அடி என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஹறாத்தைச் செய்வதை விட கோப்பையை உடைத்ததைத்தான் எனது தந்தை பாரதூரமாகக் கருதுகின்றார் என்ற எண்ணத்தையும் குழந்தையின் உள்ளத்தில் ஏற்படுத்தி விடுகின்றோம். இது எவ்வளவு பெரிய தவறு என்று சிந்தித்துப் பாருங்கள். எனவே, தண்டனை நீதியானதாக, நியாயமானதாக, தவறின் அளவுக்கு ஏற்றதாக அமைய வேண்டும்.
6. தண்டனையை சேமிக்காதீர்கள்:
சில பெற்றோர் பிள்ளைகள் தவறு செய்யும் போது கண்டுகொள்ளாமல் பல்லைக் கடித்துக் கொண்டு இருப்பார்கள். நாலைந்து தவறுகளை ஒன்றாக சேர்த்து எல்லாவற்றுக்கும் சேர்த்து மொத்தமாக அடிப்பார்கள். இது குழந்தைகளுக்கு அதிக வேதனையைக் கொடுக்கும். எல்லாத் தவறுக்குமாகக் கிடைக்கும் அடியெனப் பார்க்காமல் ஒரு தவறுக்கு இப்படி அடிக்கிறார்களே என பெற்றோர்களை வெறுக்க ஆரம்பித்துவிடுவர். எனவே தவறுக்கு அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தால் தவறு நடந்தவுடன் அடித்து அதை அந்த இடத்திலேயே மறந்துவிட்டு சாதாரணமாக நடந்து கொள்ளுங்கள்.
7. நிரபராதிகளைத் தண்டிக்காதீர்கள்:
குழந்தைகள் தண்டனையிலிருந்து தப்புவதற்காகப் பொய் சொல்வார்கள். அடுத்தவர்களை மாட்டி விடுவார்கள். ஒரு தவறு நடந்து பின்னர் தான் தப்ப வேண்டும் என்பதற்காக அடுத்தவரை மாட்டிவிடுவர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் குற்றத்தைக் குறித்த நபர் செய்தது உறுதியாகாத வரை தண்டிக்கக் கூடாது. தவறு செய்யாமல் தண்டிக்கப்பட்டால் குழந்தைகளின் உள்ளம் நொறுங்கிப் போகும். குறித்த நபர் தவறு செய்தது உறுதியாகாத சந்தர்ப்பங்களில் பொதுவாகப் புத்தி சொல்வதோடு விட்டுவிட வேண்டும். நிரபராதியைத் தண்டித்துவிட்டால் குழந்தையென்று பார்க்காமல் மன்னிப்புக் கேட்டுவிடுங்கள்.
8. மறதி, தவறுதல், நிர்ப்பந்த நிலை என்பவற்றை மன்னியுங்கள்:
தவறுதலாக அல்லது மறதியாக இடம்பெறும் தவறுகள் அல்லது நிர்ப்பந்த நிலையில் நிகழும் குற்றங்களுக்கு மன்னிப்பு அளியுங்கள். அல்லாஹ் இத்தகைய நிலைகளை மன்னித்துள்ளான். எனவே இது போன்ற சந்தர்ப்பங்களில் புத்தி சொல்வதுடன் விட்டுவிடுங்கள்.
9. உற்சாகத்திற்கு தண்டனையா?
சில பெற்றோர் பிள்ளைகள் ஓடியாடி விளையாடும் போது எரிச்சல்பட்டு பேசாம ஒரு இடத்தில இரு என்று கண்டிப்பார்கள். குழந்தைகள் என்றால் ஓடியாடி விளையாடத்தான் செய்வார்கள். இதையெல்லாம் தவறு என்று தண்டிக்கக் கூடாது. எனவே, இது போன்ற சந்தர்ப்பங்களில் அவர்களை ஒழுங்குபடுத்துங்கள்.
10. பிரச்சினைகளைக் கவனிக்காமல் தண்டிக்காதீர்கள்:
ஒரு பாடத்தில் குழந்தை குறைந்த புள்ளி எடுத்துள்ளது அல்லது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெறவில்லை போன்ற சந்தர்ப்பத்தில் குழந்தையை வையாதீர்கள். குழந்தையின் பின்னடைவுக்கு குழந்தை மட்டும் காரணமாக இருக்காது. ஆசிரியரின் குறை இருக்கலாம். பாடம் முறையாக நடக்காதிருந்திருக்கலாம். மற்றவர்கள் விட்ட குறைக்கு குழந்தைகள் தண்டிக்கப்படலாமா? எனவே, குழந்தையின் குறையில் அடுத்தவருக்கும் பங்கு இருக்கும் போது அல்லது குழந்தையிடம் மானசீகப் பிரச்சினைகள் இருக்கும் போது குழந்தையைத் தண்டிக்காமல், ஏசாமல் நீங்கள் பிரச்சினையை இணங்கான முயற்சியுங்கள். பின்னர் குழந்தையை நெறிப்படுத்துங்கள்.
11. குற்றத்தை ஒப்புக்கொண்டால் தண்டிக்காதீர்கள்:
குழந்தை குற்றத்தை ஒப்புக்கொண்டு இனி இப்படிச் செய்யமாட்டேன் என்று கூறினால் தண்டிப்பதை விட்டுவிடுங்கள். அதே போன்று அல்லாஹ்வுக்காக அடிக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டால் அடிப்பதை நிறுத்திவிடுங்கள். தண்டிப்பது என்பது இனி இது போன்ற தவறைச் செய்யக் கூடாது என்று உணர்த்துவதற்காகத்தான். பிள்ளையே இனி இப்படிச் செய்ய மாட்டேன் என்று கூறிய பின் தண்டனை தேவையில்லையல்லவா?
இது போன்ற வழிமுறைகளைக் கையாண்டு தண்டிப்பின் உண்மையான பயனை அடைந்து கொள்ள முயல்வோமாக!
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்

Tuesday, May 17, 2016

மழைக் கால துஆக்கள்


பேரன்புமிக்க சகோதர, சகோதரிகளே! தேவைக்கு அதிகமாக மழை அதிகரித்துவிட்டது. நாட்டில் பல பகுதிகளிலும் வீடுகள் நீரில் மூழ்கிவிட்டதாகவம், மன்சரிவுகளால் அதிகமான உயிரிழப்புக்கள் நேர்ந்துள்ளதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. முக்கியமாக இலுக்வத்தைக்குப் பக்கமுள்ள ரம்மலக என்ற பகுதியில் இரு முஸ்லீம் வீடுகள் நீரில் மூழ்கியதில் குழந்தைகள் உற்பட ஆறு உயிர்கள் பழியாகியிருப்பதை அறிய முடிகிறது. தொடர்ந்தும் மழை பெய்துகொண்டேயிருப்பதனால் தயவுடன் எல்லோரும் கீழ் காணும் துஆவை அதிகமதிகமாக ஓதி அல்லாஹ்விடம் மக்களுக்கு வரும் ஆபத்துகள், உயிரிழப்புக்களுக்காக பாதுகாவல் தேடுமாறு அன்பாய் வேண்டிக்கொள்கிறோம். ஜதாகல்லாஹு கைரா.

இந்த துஆவை பொருள் உணர்ந்து, மனமுறுகி ஓதுங்கள். அரபு வாசிக்க சிரமப்படுபவர்கள் தமிழில் உள்ளவாறு கேளுங்கள்:

மழையால் கெடுதி ஏற்படும் என பயந்தால்

 اَللّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا
 اَللّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَر ِ
அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா   அல்லாஹும்ம அலல் ஆகாமி வல்ஜிபாலி வல்ஆஜாமி வழ்ழிராபி  வல் அவ்தியத்தி வமனாபிதிஷ் ஷஜரி

பொருள் : இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்கிவிடாதே! யா அல்லாஹ்! குன்றுகளின் மீதும் மலையின் மீதும் ஓடைகளின் உட்புறங்களிலும் தாவரங்கள் முளைக்கும் இடங்களிலும் மழை பொழிந்திட செய்வாயாக!

ஆதாரம்: புகாரி, முஸ்லிம்


மழை பொழியும் போது

اَللّهُمَّ صَيِّبًا نَافِعًا

அல்லாஹும்ம ஸய்யிபன் நாஃபிஅன்

பொருள் : இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்கு!

ஆதாரம்: புகாரி

பலத்த காற்று அடிக்கும்போது
புயல் வீசும் போது

اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக கைரஹா வகைர மாஃபீஹா வகைர மா உர்ஸிலத் பிஹி. வஅவூது பிக மின் ஷர்ரிஹா வஷர்ரி மா ஃபீஹா வஷர்ரி மா உர்ஸிலத் பிஹி

பொருள் : இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம்

Monday, May 16, 2016

ஆண்ராய்டு மொபைலை வேகப்படுத்த வேண்டுமா!!

android

ஆண்ராய்டு மொபைல் வழியாக இணையத்தை பயன்படுத்துபவர்கள் தற்போது அதிகம். மெமரியை சுத்தபடுத்தும் 100 க்கும் மேற்பட்ட ஆப்ஸ்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. தேவைஇல்லாமல் இயங்கும் மென்பொருள்களை நிறுத்தி, சுத்தபடுத்தி, மொபைலை வேகப்படுத்தும் பயனுள்ள அருமையான மிக சிறந்த 2 ஆப்ஸ்களை பற்றி பார்ப்போம். 

கணினியில் சிறப்பாக செயல்பட்டு கணினியை வேகப்படுத்தும் அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் தற்போது Advanced Mobile Care என்ற பெயரில் இலவசமாக கிடைக்கிறது. 

சுத்தபடுத்தும் வேலை மட்டுமல்லாது கேம் பூஸ்டர், பாட்டரி சேவர், அப்ளிக்கேஷன் மேனேஜர் மற்றும் அவசியமான (Privacy Locker) போட்டோ, வீடியோ, பைல்களை மறைத்து வைக்க என்று பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. ஆண்ராய்டு மொபைல் வைத்து இருப்பவர்கள் அவசியம் பயன்படுத்த வேண்டிய மென்பொருள்.


Advanced Mobile Care

இதுவும் பல்வேறு வசதிகள் கொண்டஆப்ஸ்தான். ஒரே கிளிக்கில் மெமரியை சுத்தபடுத்தலாம். மேலும் இதில் உள்ள பயனுள்ள வசதிகளை பார்க்கவும்.

1. APK Cleaner
2. Backup & Restore 
3. Home screen short cut
4. Memory status report (RAM, ROM, SD Card memory and CPU) 
5. System information 
6. One-click task killer 
7. Cache cleaner 
8. History cleaner
9. Call log and messages cleaner 
10. SD Card temporary file cleaner 
11. App to SD Card 
12. SD Card file manager 
13. Batch installer 
14. Batch uninstaller              
15. Startup manager 
16. Add app to startup                              
17. Homescreen widget

Source : Internet

Sunday, May 15, 2016

iPhone Secret Codes| ஐபோன் இரகசிய எண்கள்!!!


01. IMEI Number | Code: *#06#
02. Field Test | Code: *3001#12345#* + ‘Call
03. Call Barring | Status: *#33# | Turn ON: *33*pin# | Turn OFF:#33*pin#
04. Call Waiting | Status: *#43# | Enable: *43# | Disable: #43#
05. Call Forwarding | Status – All: *#21# – Unreachable: *#62# – When Busy: *#67# | Disable All
Forwarding: ##002# + ‘Call’
06. Outgoing Call Anonymity | Status: *#31# + | Current Call:#31#phone-number + ‘Call’
07. Incoming Call Presentation | Status: *#30# + ‘Call’
08. SMS Message Center Number | Check: *#5005*7672# + ‘Call’
09. EFR Mode | Code: *3370# + ‘Call’


Thursday, May 12, 2016

குழந்தை பாடசாலை செல்ல அஞ்சுவது ஏன்? (சிறுவர் உளவியல்)

பாடசாலை அச்சநோய் (School Phobia)
பிள்ளைக்கு நான்கு வயதாகும்போது பாலர் பாடசாலைக்கும் ஐந்து வயதாகும் போது பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் ஏற்பாடு செய்வதை பார்க்கிறோம்.
பல பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லும்போது மிகுந்த சந்தோசத்துடன் செல்கின்றனர். காரணம் பாடசாலையில் விளையாட்டுடன் கூடிய படிப்பும், நண்பர்களின் அறிமுகமும் ஆரவாரத்துடனான செயற்பாடுகளுமேயாகும். குறிப்பாக ஆசிரியர் பிள்ளையுடன் அதிக கவனத்துடனும் பாச பிணைப்புடன் பழகும்போது பிள்ளை அந்த ஆசிரியையுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறது. பாடசாலைக்குச் செல்வதற்கும் அதிக விருப்பத்தை தெரிவிக்கிறது.
அதேவேளை இன்னும் சில பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதற்கும் பெற்றோரிடமிருந்து பிரிந்து போவதையும் கண்டு அஞ்சுகிறது. பயப்படுகிறது. அழுது புலம்புகிறது. இவ்வாறான பிள்ளைகளை சமாளித்து நிதானப்படுத்துவதில் பெற்றோர்÷ஆசிரியர் பெரும் பாடுபடுவர்.
இந்த பிள்ளைகளின் இவ்வாறான மனநிலைக்கு முக்கியமான இரு காரணங்களை மனோ வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.
முதலாவது: பிள்ளைக்கும் ஆசிரியருக்கும் நெருங்கிய தொடர் அறுந்து விடுவதால், பிள்ளை பாடசாலைக்குப் போக பயந்து அழுது அடம்பிடிக்கிறது. பிள்ளையிடம் காணப்படும் குறைகள் கோளாறுகளை ஆசிரியர் கண்டிப்புடன் தண்டிக்கும்போது ஆசிரியரின் சுபாவத்தைக் கண்டு பாடசாலைக்குப் போக அஞ்சுகிறது. பாடசாலையைப் பற்றி கதைத்தாலே பிள்ளை அஞ்சுவதற்கு இதுவே காரணம்.
எல்லாப் பிள்ளைகளும் அறிவிலும் புத்திக் கூர்மையிலும் ஒரே நிலையில் இருக்க மாட்டார்கள். ஒரு பிள்ளை புரிந்து கொள்ளும் முறையில் மற்றப் பிள்ளை புரிந்து கொள்ளாது. ஒரு பிள்ளை சரியாக புரிந்து கொள்ளும் அதேவேளை மற்றப் பிள்ளை பிழையாக விளங்கிக் கொள்ளும்.
பிள்ளைகளிடத்தில் இவ்வாறான கோளாறுகள் இருப்பதை ஆசிரியர் புரிந்து கொண்டுதான் கற்பிக்க வேண்டும். பிள்ளைகளின் மனோநிலையையும் கோளாறுகளையும் கவனிக்காமல்÷கண்டு கொள்ளாமல் ஆசிரியர் பிள்ளைகளுக்கு கற்பிக்க முனைந்தால் ஆசிரியருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்காது. அப்போது ஆசிரியர் பிள்ளையிடத்தில் கடினமாகவே நடந்து கொள்ள முனைவர். பிள்ளை ஆசிரியரை விட்டு விலகி -பாடசாலையை விட்டு தூரமாகவே விரும்பும். நாளடைவில் அதுவே ஒரு அச்ச நோயாக மாறும். அதைத்தான் பாடசாலை அச்சநோய் எனக் குறிப்பிடப்படுகிறது.
பொதுவாக இந்த அச்ச நோய் பாடசாலை மட்டத்தில் காணப்படும் அதேவேளை முஸ்லிம்கள் நடாத்தும் குர்ஆன் பாடசாலையிலும் அதிகம் காண முடிகிறது. குர்ஆன் பாடத்தை கற்பித்துக் கொடுப்பதில் ஆசிரியர் (முஅல்லிம்) மிக மிக கடுமையாக பிள்ளைகளிடத்தில் நடப்பதால்தான் பிள்ளைகள் குர்ஆன் மத்ரஸாவுக்குச் செல்ல பயப்படுகிறார்கள்.
ஒரு வகுப்பில் நாற்பது அல்லது ஐம்பது மாணவ மாணவிகள் இருக்கும்போது அந்த வகுப்பை நடாத்திச் செல்வதில்÷கற்பித்துக் கொடுப்பதில் ஆசிரியருக்கு பல சிரமங்கள் ஏற்படும். குறிப்பிட்ட 45 நிமிடத்தில் எல்லா மாணவ மாணவிகளுக்கும் கவனம் செலுத்தி கற்பிப்பதில் ஆசிரியர் மிகுந்த சிரமத்தை மேற்கொள்கிறார்கள். இவ்வேளையில் ஆசிரியருக்க திருப்திகரமான முறையில் பிள்ளைகள் படிக்கவில்லை என்றால் அல்லது நடந்து கொள்ளவில்லை என்றால் ஆசிரியர் பிள்ளைகளுடன் கடினமாக நடந்து கொள்வார். பிள்ளைகளுக்கும் ஆசிரியருக்குமிடையில் ஏற்படுகின்ற இந்த இடைவெளியினால் பாதிக்கப்படுவது நிச்சயம் பிள்ளைகள்தான். எனவே நாளடைவில் பிள்ளை ஆசிரியரைக் கண்டு -அவரது பாடத்தைக் கண்டு- பயந்து தூரமாகி விடுகிறது.
கற்பித்தல் துறைக்கு தயாராகும் ஆசிரியர்ஆசிரியைகளுக்கு Educational Psychology கற்றுக் கொடுப்பது இந்த நிலையை தவிர்ப்பதற்குத்தான். சகல வளங்களாலும் முன்னேற்றமடைந்த பாடசாலைகளில் ஒரு வகுப்பில் 30 அல்லது 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் கற்பிப்பது இந்த School Phobia வை தவிர்ப்பதற்கும் பிள்ளைகளுக்கு நல்ல முறையில் கற்பிக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்பதை இந்த இடத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாவது தாயுடனுள்ள மிதமிஞ்சிய பிணைப்பு
(i) அதாவது பிறந்ததிலிருந்து தாயுடைய மடியில், அரவணைப்பில் வளர்ந்து வந்த அந்தப் பிள்ளை முதன் முதலாக தாயை விட்டு பிரிந்து (பாடசாலைக்குச்) செல்வதாலும் பயந்து அஞ்சுகிறது. அறிமுகமற்றவர்களுடன் கலந்துறவாடுவதை பயப்படுகிறது. தாயின் அன்பும் பாசமும் கிடைக்காமல் போகுமோ என்று அஞ்சுகிறது.
(ii) அதுபோல், பெற்றோரின் பிரச்சினை அல்லது விவகாரத்தின் காரணத்தால் பெற்றோர் பிரிந்திருக்கும்போது அதனால் தாயுடைய தந்தையுடைய பாச பிணைப்பு கிடைக்காமல் தவிர்க்கும்போது பிள்ளை உள ரீதியாக பாதிப்படைந்து விடுகிறது. அதன் காரணமாகவும் தாயைவிட்டு பிரிந்து செல்ல அஞ்சுகிறது.
இந்தப் பயம் அச்சம் ஆரம்ப காலம் (முதலாம் ஆண்டு முடியும் வரை) சிலவேளை காணப்படலாம்.
-by இம்தியாஸ் யூசுப் ஸலபி-

Wednesday, May 11, 2016

ஒரே பார்வையில் (1 இருந்து 400 வரைக்கும் ) உள்ள சொற்களை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது
1- الإصلاحات الدستورية - அரசியல் அமைப்பு (யாப்பு)சீர்திருத்தங்கள்.
2-المشاكل المزمنة - நாள்பட்ட பிரச்சினைகள்
3-تحالف حرية الشعب المتحد -ஐ.ம. சுதந்திர முன்னனி
4-مجتمع الأغلبية - பெரும்பான்மை சமூகம்
5-قضايا الاقليات -சிறுபான்மையினரின் பிரச்சினைகள்
6-الحياة الطبيعية - இயல்பு வாழ்க்கை / நிலை
7-علماء الآثار - தொல்பொருள் ஆய்வாளர்கள்
8-عجوزات الميزانية - Budget பற்றாக்குறை (வரவுசெலவு திட்ட பற்றாக்குறை
9-العجز- பற்றாக்குறை
10-بمتسوط - சராசரி
11-الإستزراع السمكي /استزراع السمك -மீன் வளர்ப்பு
12/عوائد اقتصادية - பொருளாதார இலாபங்கள்
13/تقديم الدعم - ஆதரவு வழங்குதல்
14-اكبر إنتكاسة - பாரிய பின்னடைவு
15-الحكم الرشيد - நல்லாட்சி
16-فساد - ஊழல்
17-إجتثاث الفساد- ஊழலை அடியோடு ஒழித்தல்
18-منتقدون - விமர்சகர்கள்
19-الكنيسة الكاثوليكية - கத்தோலிக்க திருச்சபை
20-الإحصاء - புள்ளி விபரம் - கணக்கெடுப்பு
21-متفجرات- வெடி மருந்துகள்
22-تزويد - வழங்குதல்.
23-أسعار زهيدة மலிவான விலை (குறைந்த விலை)
24-العنف - வன்முறை
25- التطرف- தீவிரவாதம்
26-الوحدة الوطنية - தேசிய ஒற்றுமை
27-المنافسة السياسية- அரசியல் போட்டி
28-نوايا طيبة - நல்ல எண்ணங்கள்
29-متحمس لمعرفة شيئ جديد- புதிய விடயத்தை அறிந்துகொள்ள ஆர்வமுள்ளவன்
30-محظوظ - அதிர்ஷ்டம் (Lucky)
31-غير اهتمام- ஆர்வமின்மை
32-قوانين قمعية - ஒடுக்குமுறை சட்டங்கள்
33-أسباب زائفة - பொய்யான காரணங்கள்(போலியான)
34-إمتيازات - சலுகைகள்
35-التغييرات الإجتماعية - சமூக மாற்றங்கள்
36-ديكتاتورية - சர்வாதிகாரம்
37-المجتمع المتعدد الثقافات - பல்கலாசார சமூகம்
38-التحركات - நகர்வுகள்
39-المجتمع برمته - ஒட்டுமொத்த சமூகம்
40-الكاز - மண்ணெண்ணெய்
41- معارك ضارية - معارك عنيفة கடுமையான மோதல்கள்
42- تعاليم போதனைகள்
43-لفت إلى - சுட்டிக்காட்டினான்
44-تجمعات سكنية குடியிருப்பு பகுதிகள்
45- تصاعد - அதிகரிப்பு
46 - الشائعات வதந்திகள்
47 - انشقاق பிளவு படல்
48 - مجازر படுகொலை
49 - مصداقية நம்பகத்தன்மை
50 - الناتج المحلي உள்நாட்டு உற்பத்தி
51 - إعترافات ஒப்புதல்கள்
52 - وسائل إعلام محلية உள்ளூர் ஊடகங்கள்
53- هتافات கோஷங்கள்
54 - المنح மானியம்
55 - مجلس شرعي சட்ட சபை
56- شرعي சட்டப்பூர்வமான
57 - غير شرعي சட்ட விரோதமான
58 - عوائق தடைகள்
59 - مداهمة திடீர் பரிசோதனை
60- منظمة غير حكومية அரச சார்பற்ற நிறுவனம்
61 - إستخبارات புலனாய்வு - உளவுத்துறை
62 - مبادئ கோட்பாடுகள்-கொள்கைகள்
63- خطف ஆள் கடத்தல்
64 - إنتهاكات மீறல்கள்
65 - على مقربة من الحدود எல்லைக்கு அருகாமையில்
66 - ضربات جوية வான்வழி தாக்குதல்கள்
67 - مجلس الامناء நம்பிக்கையாளர் சபை
68 - قاطع பகிஸ்கரித்தான்
69 - الأزمة السياسية அரசியல் நெருக்கடி
70 - إحترام الحكم தீர்ப்பை மதித்தல்
71 - وبعبارة أخرى வேறுவிதமாக கூறினால்
72 - خصيصا பிரத்யேகமாக
73 - الميليشيات போராளிகள்,
74 - حول البلد باكمله முழு நாடும் - நாடு முழுவதும்
75 - دقيقة துல்லியமாக
76 - معركة شرسة கடுமையான போர்
77- برميل பீப்பாய் (barrel)
78 - إغتيال படுகொலை
79 - هئية مكافحة الفساد - ஊழல் தடுப்பு ஆணையம்
80 - تقليد பாரம்பரியம்
81 - القصف الصاروخي ஏவுகணை தாக்குதல்
82 - قذائف الهاون மோட்டார் ஷெல்கள்
83 - الثكنات العسكرية இராணுவமுகாம்கள்
84 - المراكز الأمنية பாதுகாப்பு மையங்கள்
85 - مرابض المدفعية பீரங்கி ஏவுதளங்கள்
86 - السجن المؤبد ஆயுள் தண்டனை
87 -مقرات القيادة கட்டளை தலைமையகம்
88 - أعرب عن قلقه தனது கவலையை தெரிவித்தான்
89 - الاماكن العامة பொது இடங்கள்
90 - نشطاء سياسيون அரசியல் ஆர்வலர்கள்- செயற்பாட்டாளர்கள்
91 - خصّص ஒதிக்கீடு செய்தான்
92 - البورصة பங்குச் சந்தை
93 - الإستثمار في البورصة பங்கு சந்தையில் முதலீடு செய்தல்
94- مصادر رفيعة المستوى உயர் மட்ட வட்டாரங்கள்
95 - إبتزاز blackmail பண்ணுதல் (மிரட்டல்)
96 - تحفيز ஊக்குவித்தல்
97 - تم إجباره கட்டாயப்படுத்தபட்டான்
98 - شد الإنتباه கவன ஈர்ப்பு
99 - لافتة إعلان விளம்பர பதாகை
100 - إخطار அறிவித்தல்
101-وكان من اللافت - கவனிக்கதக்க விடயம்
102- إحترام القانون சட்டத்தை மதித்தல்
103-إستعرض பரிசீலனை செய்தான்
104- إدانة - شجب கண்டனம் தெரிவித்தான்
105- خطورة முக்கியமான
106- وجد صداها எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது
107-دول مجاورة அண்டை நாடுகள்
108- تمركز நிலைகொண்டுள்ளான்
109-إبادة இனபடுகொலை
110- لأجيال عديدة பல தலைமுறைகளாக
111- لا يتم الإعتراف அங்கீகரிக்கப்படவில்லை
112- التعداد السكاني குடிசன மதிப்பீடு
113- تجاربنا الماضية கடந்த கால அனுபவங்கள்
114- الضرائب التعسفية தன்னிச்சையான வரிகள்
115-اعتباطي - تعسفي தன்னிச்சையான
116- ربة منزل இல்லத்தரசி
117- مرض انفلونزا الطيور பறவை காய்ச்சல்
118-للإشتباه சந்தேகத்தின் பேரில்
119- إستهلاك الذخيرة வெடிபொருட்கள் நுகர்வு
120- البرمائيات நீரிலும் நிலத்திலும் வாழ்பவைகள்
121-هدنة/مهادنة யுத்த நிறுத்தம்
122- الجيش இராணுவம் (ARMY)
123- قائد الجيش இராணுவத் தளபதி
124-مدفعية الجيش இராணுவ ஆட்டிலறி
125- قنبلة ذرية அணு குண்டு
126-طاقة ذرية அணு சக்தி
127- إشعاع ذري அணு கதிர்வீச்சு
128- تجارب ذرية அணு பரிசோதனைகள்
129- أسلحة ذرية அணு ஆயுதங்கள்
130-أسلحة تقليدية மரபார்ந்த -பாரம்பரிய ஆயுதங்கள்
131- الدفاع المدني சிவில் பாதுகாப்பு
132- خسائر المعركة போர் சேதங்கள்-இழப்புகள்
133- حبل المشنقة தூக்குக்கயிறு
134- الإكتفاء الذاتي தன்னிறைவு
135- الإسعافات الأولية முதல் உதவிகள்
136- مناطق ملوّثة மாசடைந்த பகுதிகள்
137- حظر التجول ஊரடங்கு சட்டம்
138- إتخاذ القرار தீர்மானம்-முடிவு எடுத்தல்
139- تطويق எதிரியை சுற்றிவளைத்தல்(roundup)
140- تدخلات தலையீடுகள்
141-إضراب வேலை நிறுத்தம்(Strike)
142-المؤسسات العمومية பொது நிறுவனங்கள்
143- المتاجر الخاصة தனியார் வர்த்தகநிலையங்கள்
144-على خلفية பிண்ணனியில்
145-إحتجاجات شعبية மக்கள் போராட்டங்கள்
146-فيديوهات إباحية ஆபாச வீடியோக்கள்
147-من المنتظر எதிர்பார்க்கப்படுகிறது
148-الأحداث المأساوية துயரமான சம்பவங்கள்
149-تجنيد ( இராணுவக்கு )ஆட்சேர்ப்பு
150- ضالعون في هجوم தாக்குதலில் சம்மந்தப்பட்டவர்கள்
151-تجاهل/ اللامبالاة அலட்சியம்-உதாசீனம்
152-ملامح அம்சங்கள்
153-هيمنة ஆதிக்கம்
154-إستنفار விழிப்புடன் இருத்தல்(Alert)
155-لا تخطئها العين சந்தேகத்துக்கு இடமின்றி
156-تداعيات جوهرية கணிசமான விளைவுகள்
157-قلب رأسا على عقب தலைகீழாக மாறிவிட்டது
158-على نحو غير مسبوق முன்னொருபோதுமில்லாத வகையில்
159-إستثنائية விதிவிலக்கு
160-المحاولات المستميتة தீவிரமுயட்சிகள்
161-عشم எதிர்பார்ப்பு - நம்பிக்கை
162- تصالحات சமரசங்கள்
163-الطريقة المشينة வெட்கக்கேடான /அவமானமான முறை
164-الأرشيف ஆவணக்காப்பகம்(Archives)
165- التفاني அர்ப்பணிப்பு
166- التجرد பாரபட்சமின்மை-பக்கச்சார்பின்மை
167- الإخلاص நேர்மை-நாணயம்
168- البطاقة الإئتمانية கடன் அட்டை (Credit Card)
169-بصورة مذهلة வியத்தகு முறையில்
170- أسعار معقولة நியாயமான-மலிவான விலை
171-متفرجون பார்வையாளர்கள்
172- إستحالة சாத்தியமின்மை
173-تعتيم இருட்டடிப்பு
174-المواهب الخفية மறைந்திருக்கும் திறமைகள்
175- الطلاب الموهوبون திறமை வாய்ந்த மாணவர்கள்
176-متعددة الجنسيات பண்ணாட்டவர்கள்
177- تطلعات அபிலாசைகள்
178-مشارف சுற்றுப்புறங்கள்
179-مياه المجاري கழிவு நீர்
180- حقبة யுகம்-காலகட்டம்
181- زيارات مفاجئة திடீர் விஜயம்
182-مباريات الدوري الممتاز பிரீமியர் லீக் ஆட்டங்கள்
183- نوّه إلى குறிப்பிட்டான்
184- شاهد عيان நேரில் பார்த்தவர்கள்
185- مخمور குடிகாரன்
186- الممتلكات உடைமைகள்
187- تعزيز العلاقات உறவுகளை பலப்படுத்தல்
188- مشاجرات கைகலப்புகள்
189- تعريفة கட்டணம்
190-رمضان المنصرم கடந்த-சென்ற ரமலான்
191- دوريات ரோந்து செல்லுதல்
192- مشادّات வாய்த்தர்க்கங்கள்
193- أطلق سراحـــــه விடுதலை செய்தான்
194- تم القبض கைது செய்தான் -செய்யபட்டான்
195- بلاغات முறைப்பாடுகள்
196- روتين வழமையான
197- بموجب القانون சட்டத்துக்கு அமைவாக
198- مجهودات முயற்சிகள்
199- في الآونة الأخيرة அண்மைக் காலங்களில்
200- سيادة இறையாண்மை
201- هيبـــــــــــة அதிகாரம்
202- نفـــــوذ செல்வாக்கு
203- لقي حتفه இறந்தான் - மரணித்தான்
204- الوضع الطبيعي இயல்பு நிலை
205- إتفاقية السلام சமாதான உடன்படிக்கை
206- موقع التواصل الإجتماعي சமூக வலையமைப்பு
207- حساب مزيف போலியான கணக்கு
208- إنتحال إسم போலி பெயரில் உருவாக்கல்
209- المطرب பாடகர்
210- لفت الإنتباه கவனஈர்ப்பு
211- حق الإقامة الدائمة நிரந்தர குடியிருப்பு உரிமை
212- أجهزة الأمن الوطني தேசிய பாதுகாப்பு அமைப்புகள்
213- مسلّحون مجهولون இனம்தெரியாத ஆயுததாரிகள்
214- اندلعت مواجهات عنيفة வன்முறை மோதல்கள் மூண்டது
215- إندلع حريق தீப்பிடித்தது
216- في غضون ذلك இதற்கிடையில்,
217- معسكر இராணுவ முகாம் (camp)
218- إنقلاب ஆட்சிக் கவிழ்ப்பு
219- التحقيقات الأولية ஆரம்பக்கட்ட விசாரணைகள்
220-جرّاء ذلك அதன் காரணமாக
221- أدان கண்டனம் செய்தான்
222- مطالب الشعب மக்களின் கோரிக்கைகள்
223- مؤخرا அண்மையில்
224- المناطق الآهلة بالمدنيين பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதிகள்
225- تعايش சகவாழ்வு
226- قدر الإمكان முடிந்தளவு
227- تنمية قدرات ஆளுமையை விருத்தி செய்தல்
228- مجلس الكريكيت العالمي சர்வதேச கிரிக்கட் சபை
229-المباريات التجريبية பயிற்சிப்போட்டி
230- المشجعون ரசிகர்கள்
231- كأس العالم للكريكيت கிரிக்கட் உலக கோப்பை
232- سيتم اتخاذ إجراءات تأديبية ضدهم.. அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்
233-الوفاق الوطني தேசிய உடன்படிக்கை
234- تعيين معلم ஆசிரியர் நியமனம்
235- تنظيم القاعدة அல் காய்தா அமைப்பு
236- حملات பிரச்சாரங்கள்
237- فتح تحقيق عاجل ومستقل حول جريمة الإغتصاب கற்பழிப்பு குற்றவியல் குறித்து சுயாதீனமான தீவிர விசாரணை ஆரம்பம்
238- القوات الموالية விசுவாசமான படைகள்
239- الإتهامات الزائفة பொய்யான குற்றச்சாட்டுகள்
240- البث المباشر நேரடி ஒளிபரப்பு
241-وافته المنية காலமானார்
242- شغل عددا من المناصب பல பதவிகளை வகித்தார்
243- المذابح الجماعية இனப்படுகொலை
244- المجازر المروعة கொடூரமான படுகொலைகள்
245- التطهير العرقي இன சுத்திகரிப்பு
246- الغازات السامّة நச்சு வாயுக்கள்
247- عاصفة ثلجية பனிப்புயல்
248- الهيئة الوطنية للأرصاد الجوية தேசிய வானிலை ஆராய்ச்சி ஆணையம்
249- الصقيع உறைபனி
250- تفائل நன்னம்பிக்கை
251- تفاهم புரிந்துணர்வு
252- سوء تفاهم புரிந்துணர்வு அற்ற தன்மை(புரிந்துகொள்ளாமை)
253- البيت الابيض வெள்ளை மாளிகை
254- في حقيقة الامر உண்மையில்,
255- نقاشات مستفيضة விரிவான விவாதங்கள்
256- الامبريالية ஏகாதிபத்தியம்
257- القوى الغربية மேற்கத்திய சக்திகள்
258- تأهيل புனர்வாழ்வு வழங்குதல்
259- مصادر مطلعة தகவலறிந்த வட்டாரங்கள்
260-المناطق الجبلية மலைப்பிரதேசங்கள்
261- دون إخطار مسبق முன்னறிவித்தல் இன்றி
262- مصادرة பறிமுதல் செய்தல்
263- حرية التعبير கருத்துச் சுதந்திரம்
264- الأقمار الصناعية செயற்கைக்கோள்கள் ( Satellites)
265- معاقل கோட்டைகள்
266- مصادر لصيقة நெருக்கமாக வட்டாரங்கள்
267- بصفــة غير مباشرة மறைமுகமாக
268- حكومة إنتقالية இடைக்கால அரசாங்கம்
269- الخسائر البشرية உயிர்ச்சேதங்கள்
270- معتقل தடுப்புக்காவல்
271- المشتبه فيه சந்தேக நபர்
272-مهبط الطائرة விமான ஓடுபாதை
273- الكادر பணியாளர்கள்
274- الحياد நடுநிலைமை-பாரபட்சமற்ற
275- تلبية الإحتياجات الضرورية அத்தியாவசிய தேவைகளை பூர்திசெய்தல்
276- بدلات பாதுகாப்பு உதவித்தொகை (Allowances)
277- الإسترقاق الجنسي பாலியலுக்கு அடிமையாகுதல்
278- تعيينات جديدة புதிய நியமனங்கள்
279- الاسباب الجذرية மூல காரணங்கள்
280- نازحون இடம்பெயர்ந்தவர்கள்
281- التدخل الشخصي தனிப்பட்ட தலையீடு
282- قراصنة الإنترنت இணையத்தள தகவல் திருட்டு
283- أدّى اليمين الدستورية சத்தியப் பிரமாணம் செய்துகொண்டான்
284- أدّى التحية الأخيرة இறுதி அஞ்சலி செலுத்தினான்
285- أدّى واجبه بتفان وإخلاص தனது கடமையை அர்பணிப்புடனும் நேர்மையுடனும் செய்துமுடித்தார்.
286-أدّى التحية العسكرية இராணுவமரியாதை செலுத்தினான்
287- تهديد بالقتل கொலை அச்சுறுத்தல்
288- كما من المرجح அனேகமாக
289- التغيرات المناخية காலநிலை மாற்றங்கள்
290- الدول المتقدمة அபிவிருத்தி அடைந்த நாடுகள்
291- الدول النامية அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள்
292- الجثمان பூதவுடல்
293- الشلالات நீர்வீழ்ச்சிகள் ( The waterfalls)
294- تمثل الزراعة عصب الإقتصاد السريلانكي விவசாயம்- இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது
295- المناطق المنكوبة பாதிக்கப்பட்ட பிரதேசங்கள்
296- ضحايا الكارثة அனர்த்தத்தில் பலியானவர்கள்
297- لفات النواميس நுளம்பு சுருள்கள்
298-كلة الناموسية நுளம்பு வலை
299- المناطق المحرومة பின்தங்கிய பகுதிகள்
300- دخل ثابت நிரந்தர வருமானம்
301- عاد لطبيعته -الى طبيعته வழமைக்கு திரும்பியது
302- مفرقعات பட்டாசுகள்
303- أحجار كريمة இரத்தின கற்கள்
304- العائلة المالكة அரச குடும்பம்( Royal family)
305- المشروعات التنموية அபிவிருத்தி திட்டங்கள்
306- التهديدات الأمنية பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
307- الأبرياء அப்பாவிகள்
308- العين المجردة வெற்றுக் கண்
309- الهجمات الإنتحارية தற்கொலைத் தாக்குதல்கள்
310- تسريب أسرار عسكرية இராணுவ இரகசியங்களை கசியசெய்தல்
311- القنابل المسيلة للدموع கண்ணீர்ப்புகைக் குண்டுக்கள்
312- نعومة اظفاره குழந்தைப் பருவம்
313- الإنهيارات الارضية மண்சரிவுகள்
314- الملصقات சுவரொட்டிகள்
315- المناطق الخاضعة لسيطرة الحكومة அரச கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகள்
316- الاراضي التابعة للحكومة அரசுக்கு சொந்தமான காணிகள்
317- القنابل العنقودية கொத்துக் குண்டுகள்
318- مشاعر الشعب மக்களின் உணர்வுகள்
319- كاريكاتير கேலிச்சித்திரங்கள்
320-رهن الإحتجاز العسكري இராணுவ தடுப்புக்காவல்
321-نصب تذكاري நினைவுச்சின்னம்
322- تصريحات مثيرة للجدل சர்ச்சையை உண்டுபண்ணும் கருத்துக்கள்
323- الأوضاع الراهنة தற்போதைய நிலைமைகள் - சூழ்நிலைகள்
324-مستهل العام الماضي கடந்த ஆண்டு ஆரம்பத்தில்
325- الطقوس الدينية மத சடங்குகள்-அனுஷ்டானங்கள்
326- مكان معزول தனிமையான இடம்
327- تشريح جثة பிரேதப் பரிசோதனை
328- تجميد الحسابات கணக்குகளை (accounts)முடக்குதல்
329- تجميد أملاك சொத்துக்களை முடக்குதல்
330- أتاح வழங்கினான்
331- أطاح ஆட்சியை கவிழ்த்தான்
332- في غضون 24 ساعة ( ம........24 மணி நேரத்திற்குள்
333- رغبته الشخصية சுயவிருப்பம்
334- الدول الداعمة ஆதரவளிக்கும் நாடுகள்
335- إشادة دولية சர்வதேச பாராட்டு
336- لن يتواني عن إتخاذ اية إجراءات எந்த நடவடிக்கையும் எடுக்க தயங்க மாட்டான்
337- المنصة மேடை (stage)
338- المتحدث الإعلامي ஊடகப் பேச்சாளர்
339- الدعوة مفتوحة للجميع பொது அழைப்பிதழ்
340- النظام الفاسد ஊழல் நிறைந்த அரசாங்கம்
341- المواد الإختيارية விருப்பத்துக்குரிய பாடங்கள்
342- العاهات المستديمة நிரந்தர ஊணங்கள்
343- نهب المال العام பொதுசொத்தை சுரண்டல்
344- الأعزل ج عزل நிராயுதபாணியாக
345- إختلاسات مالية பணமோசடிகள்
346- الميدالية الذهبية தங்கப்பதக்கம்
347- أسطوانة غاز கேஸ் சிலிண்டர்
348- عبّر عن غضبه கோபத்தை வெளிபடுத்தினான்
349- تحطيم الأقفال பூட்டுக்களை உடைத்தல்
350- أعمدة كهربائية மின் கம்பங்கள்
351- الأسلحــة غير الشرعية சட்ட விரோதமான ஆயுதங்கள்
352- أجرى إتصالا هاتفيا......مع தொலைபேசி அழைப்பிதழை ஏற்படுத்தினான் (தொலைபேசியில் உரையாடினான்)
353- الأسمدة இரசாயனப்பசளை
354- مخططات دولية சர்வதேச திட்டங்கள்
355- يدا بيد கைகோர்த்து
356- التبشير المسيحي கிருஸ்துவ மதமாற்றம்
357- وافق على مضض தயக்கத்துடன் (வெறுப்புடன்) ஒத்துகொண்டான்
358- محاكمة விசாரணை
359- في أوقات الذروة நெரிசலான நேரங்களில்
360-تم العثور على جثــة உடல் (body)கண்டுபிடிக்கப்பட்டது
361- السلطات العدلية நீதித்துறை அதிகாரிகள்
362- الفظاعات அட்டூழியங்கள்
363- إنتهاكات لحقوق الإنسان மனித உரிமை மீறல்கள்
364- الأوبئة தொற்றுநோய்கள்
365- توخي الحيطة எச்சரிக்கையுடன் இருத்தல்
366- أعمال التنقيب அகழ்வாராச்சி பணி
367- كدروع بشرية மனிதக் கேடயங்களாக
368- تكلفة المعيشة வாழ்க்கை செலவு
369- معاشات ஓய்வூதியம் (Pensions)
370- قدّم تضحيات مادية وجسدية பொருள் மற்றும் உடல் தியாகங்களை வழங்கினார்
371- شفافية ஒளிவுமறைவின்றி (வெளிப்படையாக)
372- اسود حالك கண்ணங் கரேல்
373- في أحلك الظروف மிக இக்கட்டான சூழ்நிலையில்
374- مطاحن ஆலைகள் (Mills)
375- مخابز பேக்கரிகள்
376- القلعة الحمراء செங்கோட்டை
377- مواطن குடிமகன்
378- ذوو الدخل المحدود குறைந்த வருமானம் உள்ளவர்கள்
379- التوابل நறுமணப் பொருள்கள்( Spices)
380- قنابل محلية الصنع உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடி குண்டுகள்
381- إعاشـــة வாழ்வாதாரம்
382- أحداث الشغب கலவரங்கள்
383-إستئناف மேல் முறையீடு செய்தல்
384- تمارين مكثفة தீவிர பயிற்சிகள்
385- السيارة الفارهة சொகுசு கார் - ஆடம்பர கார்
386- بغير قصد தற்செயலாக
387- أوصى பரிந்துரை செய்தான்
388- توصيات பரிந்துரைகள்
389- مونديال உலகக் கோப்பை (World Cup)
390- استادات விளையாட்டு அரங்கங்கள் (Stadiums)
391- بغير هوادة ஈவிரக்கமின்றி
392- بالفعل உண்மையில்
393- التهديد الإرهابي பயங்கரவாத அச்சுறுத்தல்
394- عدم الإستقرار அமைதியின்மை
395- القوات الجوية விமானப்படை (Air Force)
396- تحسين المستوي المعيشي வாழ்க்கை தரத்தை மேம்படுத்துதல்
397- مناطق سكنية مكتظة நெரிசல் மிகுந்த குடியிருப்புப் பகுதிகள்
398- الطائرات المقاتلة التابعة لأمريكا அமெரிக்காவுக்கு சொந்தமான போர் விமானங்கள்
399- بوادر الرغبات விருப்பத்திற்குறிய அறிகுறிகள்
400- المعلمون المتقاعدون ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்

ஒரே நாளில் 400அரபு சொற்களை கற்க ......

ஒரே பார்வையில் (1 இருந்து 400 வரைக்கும் ) உள்ள சொற்களை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது

1- الإصلاحات الدستورية - அரசியல் அமைப்பு (யாப்பு)சீர்திருத்தங்கள்.
2-المشاكل المزمنة - நாள்பட்ட பிரச்சினைகள் 
3-تحالف حرية الشعب المتحد -ஐ.ம. சுதந்திர முன்னனி 
4-مجتمع الأغلبية - பெரும்பான்மை சமூகம் 
5-قضايا الاقليات -சிறுபான்மையினரின் பிரச்சினைகள் 
6-الحياة الطبيعية - இயல்பு வாழ்க்கை / நிலை 
7-علماء الآثار - தொல்பொருள் ஆய்வாளர்கள் 
8-عجوزات الميزانية - Budget பற்றாக்குறை (வரவுசெலவு திட்ட பற்றாக்குறை
9-العجز- பற்றாக்குறை 
10-بمتسوط - சராசரி 
11-الإستزراع السمكي /استزراع السمك -மீன் வளர்ப்பு 
12/عوائد اقتصادية - பொருளாதார இலாபங்கள் 
13/تقديم الدعم - ஆதரவு வழங்குதல் 
14-اكبر إنتكاسة - பாரிய பின்னடைவு 
15-الحكم الرشيد - நல்லாட்சி 
16-فساد - ஊழல்
17-إجتثاث الفساد- ஊழலை அடியோடு ஒழித்தல் 
18-منتقدون - விமர்சகர்கள் 
19-الكنيسة الكاثوليكية - கத்தோலிக்க திருச்சபை 
20-الإحصاء - புள்ளி விபரம் - கணக்கெடுப்பு
21-متفجرات- வெடி மருந்துகள் 
22-تزويد - வழங்குதல்.
23-أسعار زهيدة மலிவான விலை (குறைந்த விலை)
24-العنف - வன்முறை
25- التطرف- தீவிரவாதம்
26-الوحدة الوطنية - தேசிய ஒற்றுமை 
27-المنافسة السياسية- அரசியல் போட்டி 
28-نوايا طيبة - நல்ல எண்ணங்கள் 
29-متحمس لمعرفة شيئ جديد- புதிய விடயத்தை அறிந்துகொள்ள ஆர்வமுள்ளவன் 
30-محظوظ - அதிர்ஷ்டம் (Lucky)
31-غير اهتمام- ஆர்வமின்மை 
32-قوانين قمعية - ஒடுக்குமுறை சட்டங்கள்
33-أسباب زائفة - பொய்யான காரணங்கள்(போலியான)
34-إمتيازات - சலுகைகள் 
35-التغييرات الإجتماعية - சமூக மாற்றங்கள்
36-ديكتاتورية - சர்வாதிகாரம்
37-المجتمع المتعدد الثقافات - பல்கலாசார சமூகம் 
38-التحركات - நகர்வுகள்
39-المجتمع برمته - ஒட்டுமொத்த சமூகம் 
40-الكاز - மண்ணெண்ணெய்
41- معارك ضارية - معارك عنيفة கடுமையான மோதல்கள் 
42- تعاليم போதனைகள் 
43-لفت إلى - சுட்டிக்காட்டினான் 
44-تجمعات سكنية குடியிருப்பு பகுதிகள் 
45- تصاعد - அதிகரிப்பு 
46 - الشائعات வதந்திகள்
47 - انشقاق பிளவு படல் 
48 - مجازر படுகொலை 
49 - مصداقية நம்பகத்தன்மை
50 - الناتج المحلي உள்நாட்டு உற்பத்தி
51 - إعترافات ஒப்புதல்கள்
52 - وسائل إعلام محلية உள்ளூர் ஊடகங்கள் 
53- هتافات கோஷங்கள் 
54 - المنح மானியம்
55 - مجلس شرعي சட்ட சபை 
56- شرعي சட்டப்பூர்வமான 
57 - غير شرعي சட்ட விரோதமான
58 - عوائق தடைகள்
59 - مداهمة திடீர் பரிசோதனை 
60- منظمة غير حكومية அரச சார்பற்ற நிறுவனம்
61 - إستخبارات புலனாய்வு - உளவுத்துறை
62 - مبادئ கோட்பாடுகள்-கொள்கைகள்
63- خطف ஆள் கடத்தல்
64 - إنتهاكات மீறல்கள்
65 - على مقربة من الحدود எல்லைக்கு அருகாமையில்
66 - ضربات جوية வான்வழி தாக்குதல்கள்
67 - مجلس الامناء நம்பிக்கையாளர் சபை 
68 - قاطع பகிஸ்கரித்தான் 
69 - الأزمة السياسية அரசியல் நெருக்கடி
70 - إحترام الحكم தீர்ப்பை மதித்தல் 
71 - وبعبارة أخرى வேறுவிதமாக கூறினால்
72 - خصيصا பிரத்யேகமாக
73 - الميليشيات போராளிகள்,
74 - حول البلد باكمله முழு நாடும் - நாடு முழுவதும்
75 - دقيقة துல்லியமாக 
76 - معركة شرسة கடுமையான போர்
77- برميل பீப்பாய் (barrel)
78 - إغتيال படுகொலை
79 - هئية مكافحة الفساد - ஊழல் தடுப்பு ஆணையம்
80 - تقليد பாரம்பரியம்
81 - القصف الصاروخي ஏவுகணை தாக்குதல்
82 - قذائف الهاون மோட்டார் ஷெல்கள்
83 - الثكنات العسكرية இராணுவமுகாம்கள்
84 - المراكز الأمنية பாதுகாப்பு மையங்கள் 
85 - مرابض المدفعية பீரங்கி ஏவுதளங்கள்
86 - السجن المؤبد ஆயுள் தண்டனை
87 -مقرات القيادة கட்டளை தலைமையகம்
88 - أعرب عن قلقه தனது கவலையை தெரிவித்தான் 
89 - الاماكن العامة பொது இடங்கள்
90 - نشطاء سياسيون அரசியல் ஆர்வலர்கள்- செயற்பாட்டாளர்கள்
91 - خصّص ஒதிக்கீடு செய்தான் 
92 - البورصة பங்குச் சந்தை
93 - الإستثمار في البورصة பங்கு சந்தையில் முதலீடு செய்தல் 
94- مصادر رفيعة المستوى உயர் மட்ட வட்டாரங்கள்
95 - إبتزاز blackmail பண்ணுதல் (மிரட்டல்)
96 - تحفيز ஊக்குவித்தல் 
97 - تم إجباره கட்டாயப்படுத்தபட்டான் 
98 - شد الإنتباه கவன ஈர்ப்பு 
99 - لافتة إعلان விளம்பர பதாகை 
100 - إخطار அறிவித்தல்
101-وكان من اللافت - கவனிக்கதக்க விடயம் 
102- إحترام القانون சட்டத்தை மதித்தல் 
103-إستعرض பரிசீலனை செய்தான் 
104- إدانة - شجب கண்டனம் தெரிவித்தான் 
105- خطورة முக்கியமான 
106- وجد صداها எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது 
107-دول مجاورة அண்டை நாடுகள்
108- تمركز நிலைகொண்டுள்ளான் 
109-إبادة இனபடுகொலை 
110- لأجيال عديدة பல தலைமுறைகளாக 
111- لا يتم الإعتراف அங்கீகரிக்கப்படவில்லை
112- التعداد السكاني குடிசன மதிப்பீடு 
113- تجاربنا الماضية கடந்த கால அனுபவங்கள் 
114- الضرائب التعسفية தன்னிச்சையான வரிகள் 
115-اعتباطي - تعسفي தன்னிச்சையான
116- ربة منزل இல்லத்தரசி
117- مرض انفلونزا الطيور பறவை காய்ச்சல்
118-للإشتباه சந்தேகத்தின் பேரில்
119- إستهلاك الذخيرة வெடிபொருட்கள் நுகர்வு 
120- البرمائيات நீரிலும் நிலத்திலும் வாழ்பவைகள்
121-هدنة/مهادنة யுத்த நிறுத்தம்
122- الجيش இராணுவம் (ARMY)
123- قائد الجيش இராணுவத் தளபதி
124-مدفعية الجيش இராணுவ ஆட்டிலறி
125- قنبلة ذرية அணு குண்டு
126-طاقة ذرية அணு சக்தி
127- إشعاع ذري அணு கதிர்வீச்சு
128- تجارب ذرية அணு பரிசோதனைகள்
129- أسلحة ذرية அணு ஆயுதங்கள் 
130-أسلحة تقليدية மரபார்ந்த -பாரம்பரிய ஆயுதங்கள்
131- الدفاع المدني சிவில் பாதுகாப்பு
132- خسائر المعركة போர் சேதங்கள்-இழப்புகள் 
133- حبل المشنقة தூக்குக்கயிறு
134- الإكتفاء الذاتي தன்னிறைவு
135- الإسعافات الأولية முதல் உதவிகள் 
136- مناطق ملوّثة மாசடைந்த பகுதிகள்
137- حظر التجول ஊரடங்கு சட்டம் 
138- إتخاذ القرار தீர்மானம்-முடிவு எடுத்தல் 
139- تطويق எதிரியை சுற்றிவளைத்தல்(roundup)
140- تدخلات தலையீடுகள்
141-إضراب வேலை நிறுத்தம்(Strike)
142-المؤسسات العمومية பொது நிறுவனங்கள்
143- المتاجر الخاصة தனியார் வர்த்தகநிலையங்கள் 
144-على خلفية பிண்ணனியில் 
145-إحتجاجات شعبية மக்கள் போராட்டங்கள் 
146-فيديوهات إباحية ஆபாச வீடியோக்கள் 
147-من المنتظر எதிர்பார்க்கப்படுகிறது
148-الأحداث المأساوية துயரமான சம்பவங்கள்
149-تجنيد ( இராணுவக்கு )ஆட்சேர்ப்பு 
150- ضالعون في هجوم தாக்குதலில் சம்மந்தப்பட்டவர்கள் 
151-تجاهل/ اللامبالاة அலட்சியம்-உதாசீனம்
152-ملامح அம்சங்கள்
153-هيمنة ஆதிக்கம்
154-إستنفار விழிப்புடன் இருத்தல்(Alert)
155-لا تخطئها العين சந்தேகத்துக்கு இடமின்றி 
156-تداعيات جوهرية கணிசமான விளைவுகள் 
157-قلب رأسا على عقب தலைகீழாக மாறிவிட்டது 
158-على نحو غير مسبوق முன்னொருபோதுமில்லாத வகையில்
159-إستثنائية விதிவிலக்கு 
160-المحاولات المستميتة தீவிரமுயட்சிகள்
161-عشم எதிர்பார்ப்பு - நம்பிக்கை 
162- تصالحات சமரசங்கள் 
163-الطريقة المشينة வெட்கக்கேடான /அவமானமான முறை 
164-الأرشيف ஆவணக்காப்பகம்(Archives)
165- التفاني அர்ப்பணிப்பு
166- التجرد பாரபட்சமின்மை-பக்கச்சார்பின்மை
167- الإخلاص நேர்மை-நாணயம்
168- البطاقة الإئتمانية கடன் அட்டை (Credit Card)
169-بصورة مذهلة வியத்தகு முறையில் 
170- أسعار معقولة நியாயமான-மலிவான விலை 
171-متفرجون பார்வையாளர்கள்
172- إستحالة சாத்தியமின்மை
173-تعتيم இருட்டடிப்பு
174-المواهب الخفية மறைந்திருக்கும் திறமைகள் 
175- الطلاب الموهوبون திறமை வாய்ந்த மாணவர்கள் 
176-متعددة الجنسيات பண்ணாட்டவர்கள் 
177- تطلعات அபிலாசைகள் 
178-مشارف சுற்றுப்புறங்கள் 
179-مياه المجاري கழிவு நீர் 
180- حقبة யுகம்-காலகட்டம்
181- زيارات مفاجئة திடீர் விஜயம் 
182-مباريات الدوري الممتاز பிரீமியர் லீக் ஆட்டங்கள் 
183- نوّه إلى குறிப்பிட்டான்
184- شاهد عيان நேரில் பார்த்தவர்கள் 
185- مخمور குடிகாரன்
186- الممتلكات உடைமைகள்
187- تعزيز العلاقات உறவுகளை பலப்படுத்தல்
188- مشاجرات கைகலப்புகள்
189- تعريفة கட்டணம்
190-رمضان المنصرم கடந்த-சென்ற ரமலான்
191- دوريات ரோந்து செல்லுதல்
192- مشادّات வாய்த்தர்க்கங்கள்
193- أطلق سراحـــــه விடுதலை செய்தான் 
194- تم القبض கைது செய்தான் -செய்யபட்டான் 
195- بلاغات முறைப்பாடுகள் 
196- روتين வழமையான 
197- بموجب القانون சட்டத்துக்கு அமைவாக 
198- مجهودات முயற்சிகள்
199- في الآونة الأخيرة அண்மைக் காலங்களில் 
200- سيادة இறையாண்மை
201- هيبـــــــــــة அதிகாரம் 
202- نفـــــوذ செல்வாக்கு 
203- لقي حتفه இறந்தான் - மரணித்தான் 
204- الوضع الطبيعي இயல்பு நிலை 
205- إتفاقية السلام சமாதான உடன்படிக்கை 
206- موقع التواصل الإجتماعي சமூக வலையமைப்பு
207- حساب مزيف போலியான கணக்கு
208- إنتحال إسم போலி பெயரில் உருவாக்கல் 
209- المطرب பாடகர்
210- لفت الإنتباه கவனஈர்ப்பு 
211- حق الإقامة الدائمة நிரந்தர குடியிருப்பு உரிமை
212- أجهزة الأمن الوطني தேசிய பாதுகாப்பு அமைப்புகள்
213- مسلّحون مجهولون இனம்தெரியாத ஆயுததாரிகள் 
214- اندلعت مواجهات عنيفة வன்முறை மோதல்கள் மூண்டது
215- إندلع حريق தீப்பிடித்தது 
216- في غضون ذلك இதற்கிடையில்,
217- معسكر இராணுவ முகாம் (camp)
218- إنقلاب ஆட்சிக் கவிழ்ப்பு 
219- التحقيقات الأولية ஆரம்பக்கட்ட விசாரணைகள் 
220-جرّاء ذلك அதன் காரணமாக
221- أدان கண்டனம் செய்தான் 
222- مطالب الشعب மக்களின் கோரிக்கைகள் 
223- مؤخرا அண்மையில்
224- المناطق الآهلة بالمدنيين பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதிகள் 
225- تعايش சகவாழ்வு
226- قدر الإمكان முடிந்தளவு 
227- تنمية قدرات ஆளுமையை விருத்தி செய்தல் 
228- مجلس الكريكيت العالمي சர்வதேச கிரிக்கட் சபை 
229-المباريات التجريبية பயிற்சிப்போட்டி
230- المشجعون ரசிகர்கள்
231- كأس العالم للكريكيت கிரிக்கட் உலக கோப்பை
232- سيتم اتخاذ إجراءات تأديبية ضدهم.. அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்
233-الوفاق الوطني தேசிய உடன்படிக்கை
234- تعيين معلم ஆசிரியர் நியமனம்
235- تنظيم القاعدة அல் காய்தா அமைப்பு
236- حملات பிரச்சாரங்கள்
237- فتح تحقيق عاجل ومستقل حول جريمة الإغتصاب கற்பழிப்பு குற்றவியல் குறித்து சுயாதீனமான தீவிர விசாரணை ஆரம்பம் 
238- القوات الموالية விசுவாசமான படைகள்
239- الإتهامات الزائفة பொய்யான குற்றச்சாட்டுகள்
240- البث المباشر நேரடி ஒளிபரப்பு
241-وافته المنية காலமானார்
242- شغل عددا من المناصب பல பதவிகளை வகித்தார் 
243- المذابح الجماعية இனப்படுகொலை 
244- المجازر المروعة கொடூரமான படுகொலைகள்
245- التطهير العرقي இன சுத்திகரிப்பு
246- الغازات السامّة நச்சு வாயுக்கள்
247- عاصفة ثلجية பனிப்புயல்
248- الهيئة الوطنية للأرصاد الجوية தேசிய வானிலை ஆராய்ச்சி ஆணையம்
249- الصقيع உறைபனி
250- تفائل நன்னம்பிக்கை
251- تفاهم புரிந்துணர்வு
252- سوء تفاهم புரிந்துணர்வு அற்ற தன்மை(புரிந்துகொள்ளாமை)
253- البيت الابيض வெள்ளை மாளிகை 
254- في حقيقة الامر உண்மையில், 
255- نقاشات مستفيضة விரிவான விவாதங்கள்
256- الامبريالية ஏகாதிபத்தியம்
257- القوى الغربية மேற்கத்திய சக்திகள்
258- تأهيل புனர்வாழ்வு வழங்குதல் 
259- مصادر مطلعة தகவலறிந்த வட்டாரங்கள் 
260-المناطق الجبلية மலைப்பிரதேசங்கள்
261- دون إخطار مسبق முன்னறிவித்தல் இன்றி
262- مصادرة பறிமுதல் செய்தல்
263- حرية التعبير கருத்துச் சுதந்திரம்
264- الأقمار الصناعية செயற்கைக்கோள்கள் ( Satellites)
265- معاقل கோட்டைகள் 
266- مصادر لصيقة நெருக்கமாக வட்டாரங்கள்
267- بصفــة غير مباشرة மறைமுகமாக
268- حكومة إنتقالية இடைக்கால அரசாங்கம்
269- الخسائر البشرية உயிர்ச்சேதங்கள்
270- معتقل தடுப்புக்காவல்
271- المشتبه فيه சந்தேக நபர்
272-مهبط الطائرة விமான ஓடுபாதை
273- الكادر பணியாளர்கள்
274- الحياد நடுநிலைமை-பாரபட்சமற்ற
275- تلبية الإحتياجات الضرورية அத்தியாவசிய தேவைகளை பூர்திசெய்தல்
276- بدلات பாதுகாப்பு உதவித்தொகை (Allowances)
277- الإسترقاق الجنسي பாலியலுக்கு அடிமையாகுதல்
278- تعيينات جديدة புதிய நியமனங்கள் 
279- الاسباب الجذرية மூல காரணங்கள்
280- نازحون இடம்பெயர்ந்தவர்கள்
281- التدخل الشخصي தனிப்பட்ட தலையீடு
282- قراصنة الإنترنت இணையத்தள தகவல் திருட்டு 
283- أدّى اليمين الدستورية சத்தியப் பிரமாணம் செய்துகொண்டான் 
284- أدّى التحية الأخيرة இறுதி அஞ்சலி செலுத்தினான் 
285- أدّى واجبه بتفان وإخلاص தனது கடமையை அர்பணிப்புடனும் நேர்மையுடனும் செய்துமுடித்தார்.
286-أدّى التحية العسكرية இராணுவமரியாதை செலுத்தினான் 
287- تهديد بالقتل கொலை அச்சுறுத்தல் 
288- كما من المرجح அனேகமாக 
289- التغيرات المناخية காலநிலை மாற்றங்கள் 
290- الدول المتقدمة அபிவிருத்தி அடைந்த நாடுகள் 
291- الدول النامية அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் 
292- الجثمان பூதவுடல் 
293- الشلالات நீர்வீழ்ச்சிகள் ( The waterfalls)
294- تمثل الزراعة عصب الإقتصاد السريلانكي விவசாயம்- இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது
295- المناطق المنكوبة பாதிக்கப்பட்ட பிரதேசங்கள்
296- ضحايا الكارثة அனர்த்தத்தில் பலியானவர்கள் 
297- لفات النواميس நுளம்பு சுருள்கள் 
298-كلة الناموسية நுளம்பு வலை 
299- المناطق المحرومة பின்தங்கிய பகுதிகள் 
300- دخل ثابت நிரந்தர வருமானம்
301- عاد لطبيعته -الى طبيعته வழமைக்கு திரும்பியது 
302- مفرقعات பட்டாசுகள்
303- أحجار كريمة இரத்தின கற்கள்
304- العائلة المالكة அரச குடும்பம்( Royal family) 
305- المشروعات التنموية அபிவிருத்தி திட்டங்கள்
306- التهديدات الأمنية பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
307- الأبرياء அப்பாவிகள்
308- العين المجردة வெற்றுக் கண் 
309- الهجمات الإنتحارية தற்கொலைத் தாக்குதல்கள் 
310- تسريب أسرار عسكرية இராணுவ இரகசியங்களை கசியசெய்தல் 
311- القنابل المسيلة للدموع கண்ணீர்ப்புகைக் குண்டுக்கள்
312- نعومة اظفاره குழந்தைப் பருவம்
313- الإنهيارات الارضية மண்சரிவுகள்
314- الملصقات சுவரொட்டிகள்
315- المناطق الخاضعة لسيطرة الحكومة அரச கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகள் 
316- الاراضي التابعة للحكومة அரசுக்கு சொந்தமான காணிகள்
317- القنابل العنقودية கொத்துக் குண்டுகள்
318- مشاعر الشعب மக்களின் உணர்வுகள் 
319- كاريكاتير கேலிச்சித்திரங்கள் 
320-رهن الإحتجاز العسكري இராணுவ தடுப்புக்காவல்
321-نصب تذكاري நினைவுச்சின்னம்
322- تصريحات مثيرة للجدل சர்ச்சையை உண்டுபண்ணும் கருத்துக்கள் 
323- الأوضاع الراهنة தற்போதைய நிலைமைகள் - சூழ்நிலைகள் 
324-مستهل العام الماضي கடந்த ஆண்டு ஆரம்பத்தில் 
325- الطقوس الدينية மத சடங்குகள்-அனுஷ்டானங்கள் 
326- مكان معزول தனிமையான இடம் 
327- تشريح جثة பிரேதப் பரிசோதனை
328- تجميد الحسابات கணக்குகளை (accounts)முடக்குதல் 
329- تجميد أملاك சொத்துக்களை முடக்குதல் 
330- أتاح வழங்கினான் 
331- أطاح ஆட்சியை கவிழ்த்தான் 
332- في غضون 24 ساعة ( ம........24 மணி நேரத்திற்குள் 
333- رغبته الشخصية சுயவிருப்பம் 
334- الدول الداعمة ஆதரவளிக்கும் நாடுகள் 
335- إشادة دولية சர்வதேச பாராட்டு 
336- لن يتواني عن إتخاذ اية إجراءات எந்த நடவடிக்கையும் எடுக்க தயங்க மாட்டான் 
337- المنصة மேடை (stage)
338- المتحدث الإعلامي ஊடகப் பேச்சாளர்
339- الدعوة مفتوحة للجميع பொது அழைப்பிதழ் 
340- النظام الفاسد ஊழல் நிறைந்த அரசாங்கம்
341- المواد الإختيارية விருப்பத்துக்குரிய பாடங்கள் 
342- العاهات المستديمة நிரந்தர ஊணங்கள் 
343- نهب المال العام பொதுசொத்தை சுரண்டல் 
344- الأعزل ج عزل நிராயுதபாணியாக 
345- إختلاسات مالية பணமோசடிகள் 
346- الميدالية الذهبية தங்கப்பதக்கம் 
347- أسطوانة غاز கேஸ் சிலிண்டர் 
348- عبّر عن غضبه கோபத்தை வெளிபடுத்தினான் 
349- تحطيم الأقفال பூட்டுக்களை உடைத்தல் 
350- أعمدة كهربائية மின் கம்பங்கள் 
351- الأسلحــة غير الشرعية சட்ட விரோதமான ஆயுதங்கள்
352- أجرى إتصالا هاتفيا......مع தொலைபேசி அழைப்பிதழை ஏற்படுத்தினான் (தொலைபேசியில் உரையாடினான்)
353- الأسمدة இரசாயனப்பசளை 
354- مخططات دولية சர்வதேச திட்டங்கள் 
355- يدا بيد கைகோர்த்து
356- التبشير المسيحي கிருஸ்துவ மதமாற்றம் 
357- وافق على مضض தயக்கத்துடன் (வெறுப்புடன்) ஒத்துகொண்டான் 
358- محاكمة விசாரணை
359- في أوقات الذروة நெரிசலான நேரங்களில் 
360-تم العثور على جثــة உடல் (body)கண்டுபிடிக்கப்பட்டது
361- السلطات العدلية நீதித்துறை அதிகாரிகள்
362- الفظاعات அட்டூழியங்கள்
363- إنتهاكات لحقوق الإنسان மனித உரிமை மீறல்கள் 
364- الأوبئة தொற்றுநோய்கள் 
365- توخي الحيطة எச்சரிக்கையுடன் இருத்தல் 
366- أعمال التنقيب அகழ்வாராச்சி பணி 
367- كدروع بشرية மனிதக் கேடயங்களாக 
368- تكلفة المعيشة வாழ்க்கை செலவு
369- معاشات ஓய்வூதியம் (Pensions)
370- قدّم تضحيات مادية وجسدية பொருள் மற்றும் உடல் தியாகங்களை வழங்கினார் 
371- شفافية ஒளிவுமறைவின்றி (வெளிப்படையாக)
372- اسود حالك கண்ணங் கரேல் 
373- في أحلك الظروف மிக இக்கட்டான சூழ்நிலையில் 
374- مطاحن ஆலைகள் (Mills)
375- مخابز பேக்கரிகள்
376- القلعة الحمراء செங்கோட்டை
377- مواطن குடிமகன்
378- ذوو الدخل المحدود குறைந்த வருமானம் உள்ளவர்கள்
379- التوابل நறுமணப் பொருள்கள்( Spices)
380- قنابل محلية الصنع உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடி குண்டுகள்
381- إعاشـــة வாழ்வாதாரம் 
382- أحداث الشغب கலவரங்கள் 
383-إستئناف மேல் முறையீடு செய்தல் 
384- تمارين مكثفة தீவிர பயிற்சிகள் 
385- السيارة الفارهة சொகுசு கார் - ஆடம்பர கார்
386- بغير قصد தற்செயலாக
387- أوصى பரிந்துரை செய்தான் 
388- توصيات பரிந்துரைகள் 
389- مونديال உலகக் கோப்பை (World Cup)
390- استادات விளையாட்டு அரங்கங்கள் (Stadiums)
391- بغير هوادة ஈவிரக்கமின்றி 
392- بالفعل உண்மையில் 
393- التهديد الإرهابي பயங்கரவாத அச்சுறுத்தல் 
394- عدم الإستقرار அமைதியின்மை 
395- القوات الجوية விமானப்படை (Air Force)
396- تحسين المستوي المعيشي வாழ்க்கை தரத்தை மேம்படுத்துதல்
397- مناطق سكنية مكتظة நெரிசல் மிகுந்த குடியிருப்புப் பகுதிகள் 
398- الطائرات المقاتلة التابعة لأمريكا அமெரிக்காவுக்கு சொந்தமான போர் விமானங்கள்
399- بوادر الرغبات விருப்பத்திற்குறிய அறிகுறிகள்
400- المعلمون المتقاعدون ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்