Monday, May 9, 2016

க.பொ.தா. சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான கருத்தரங்கு.

க.பொ.தா. சாதாரண தரப் பரீட்சை எழுதி உயர்தரத்தில் கல்வி கற்கக் காத்திருக்கும் மாணவர்களுக்கான கருத்தரங்கு ஒன்று இஸ்லாமிய உத்வேக ஒன்றிய அமைப்பால் (Islamic Inspirational Organization) நேற்றைய தினம் கண்டி/ திகன/ ஹிஜ்ராபுர முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகராமாக நடாத்தி முடிக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் சிறப்பு வளவாளராக நாடளாவிய ரீதியில் பிரபலயமான சகோதரர். மனூஸ் அபூபக்கர் அவர்கள் வருகை தந்திருந்தார். மேலும் இந்த நிகழ்வின் மூலம் உயர்தரத்தில் கல்வி கற்கவிருக்கும் பல்வேறு மாணவர்களது சந்தேகங்கள் தீர்க்கப்பட்டது என்பதும் குறித்துக் காட்டப்பட வேண்டியது.
எதிர்காலத்தில் சிங்கள பாடசாலைகளிலும் இவ்வாறான வழிகாட்டல் கருத்தரங்குகள், செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்று அமைப்பின் தலைவர் சகோதரர் அஹமட் நதா ரிஸ்வான் தெரிவித்தார்.

அனீஸ் அலி முஹம்மத்
உப தலைவர் 






No comments:

Post a Comment