மழைக் கால துஆக்கள்
பேரன்புமிக்க சகோதர, சகோதரிகளே! தேவைக்கு அதிகமாக மழை அதிகரித்துவிட்டது. நாட்டில் பல பகுதிகளிலும் வீடுகள் நீரில் மூழ்கிவிட்டதாகவம், மன்சரிவுகளால் அதிகமான உயிரிழப்புக்கள் நேர்ந்துள்ளதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. முக்கியமாக இலுக்வத்தைக்குப் பக்கமுள்ள ரம்மலக என்ற பகுதியில் இரு முஸ்லீம் வீடுகள் நீரில் மூழ்கியதில் குழந்தைகள் உற்பட ஆறு உயிர்கள் பழியாகியிருப்பதை அறிய முடிகிறது. தொடர்ந்தும் மழை பெய்துகொண்டேயிருப்பதனால் தயவுடன் எல்லோரும் கீழ் காணும் துஆவை அதிகமதிகமாக ஓதி அல்லாஹ்விடம் மக்களுக்கு வரும் ஆபத்துகள், உயிரிழப்புக்களுக்காக பாதுகாவல் தேடுமாறு அன்பாய் வேண்டிக்கொள்கிறோம். ஜதாகல்லாஹு கைரா.
இந்த துஆவை பொருள் உணர்ந்து, மனமுறுகி ஓதுங்கள். அரபு வாசிக்க சிரமப்படுபவர்கள் தமிழில் உள்ளவாறு கேளுங்கள்:
மழையால் கெடுதி ஏற்படும் என பயந்தால்
اَللّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا
اَللّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَر ِ
அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா அல்லாஹும்ம அலல் ஆகாமி வல்ஜிபாலி வல்ஆஜாமி வழ்ழிராபி வல் அவ்தியத்தி வமனாபிதிஷ் ஷஜரி
பொருள் : இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்கிவிடாதே! யா அல்லாஹ்! குன்றுகளின் மீதும் மலையின் மீதும் ஓடைகளின் உட்புறங்களிலும் தாவரங்கள் முளைக்கும் இடங்களிலும் மழை பொழிந்திட செய்வாயாக!
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
மழை பொழியும் போது
اَللّهُمَّ صَيِّبًا نَافِعًا
அல்லாஹும்ம ஸய்யிபன் நாஃபிஅன்
பொருள் : இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்கு!
ஆதாரம்: புகாரி
பலத்த காற்று அடிக்கும்போது
புயல் வீசும் போது
اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக கைரஹா வகைர மாஃபீஹா வகைர மா உர்ஸிலத் பிஹி. வஅவூது பிக மின் ஷர்ரிஹா வஷர்ரி மா ஃபீஹா வஷர்ரி மா உர்ஸிலத் பிஹி
பொருள் : இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம்
No comments:
Post a Comment